உடுமலை அருகே, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

உடுமலை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உடுமலை அருகே, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
Published on

திருப்பூர்,

உடுமலை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 20-9-2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 6 மற்றும் 5 வயது கொண்ட 2 சிறுமிகளை மிட்டாய் வாங்கி தருவதாகக்கூறி, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

தொடர்ந்து 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் வீட்டிற்கு சிறுமிகள் அழுதுகொண்டே வந்தனர். தொடர்ந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி ஜெயந்தி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com