

உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம்(வயது 50). இவர் சம்பவத்தன்று இரவு தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பூங்காவனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.