நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நிலுவை சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் செய்தனர்.
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நெடுங்காடு

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுங்காடு கடைவீதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் ராஜகோபால்ராஜா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர் அய்யப்பன், இணை பொதுச் செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முடிவில் சங்க செயலாளர் நெப்போலியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com