மேல்தளம் அமைப்பதில் புதிய முறைகள்

கான்கிரீட் அமைப்பதற்கான முட்டு பலகைகள் மரம், இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் என்று வெவ்வேறு பொருட்கள் இன்றைய நிலையில் கிடைக்கின்றன.
மேல்தளம் அமைப்பதில் புதிய முறைகள்
Published on

எந்த வகையான பலகைகளை பயன்படுத்தினாலும், கான்கிரீட் இடும் வேலை முடிந்த பின்பு பலகைகளை பிரித்தெடுக்கும் நேரத்தில் கவனமாக செயல்பட கூடுதலான நேரம் தேவைப்படும். முட்டுக்களை பிரித்தெடுக்கும்போது, கான்கிரீட்டையும் சேர்த்து உரித்துக்கொண்டு வருவதை தவிர்க்க, கான்கிரீட் பலகையுடன் ஒட்டிக் கொள்வதை தவிர்க்கும் எண்ணெய் அல்லது ரசாயன பொருட்களை பயன்படுத்தலாம்.

கான்கிரீட் பரப்பு வழுவழுப்பாக இருக்கும் பட்சத்தில், மேற்காரை சரியாக பிடிப்புடன் இருப்பதற்கு சிறிய உளி மூலம் ஆங்காங்கே சிறுசிறு புள்ளிகள் போன்று கொத்தி விட வேண்டியதாக இருக்கும். இந்த முறைக்கு மாற்றாக புதிய பாய்களை, கான்கிரீட் அமைக்கும்போது கீழ்ப்புறமாக பரப்பி வைக்கலாம். பாயின் அமைப்பு காரணமாக கான்கிரீட்டில் வரிவரியாக அமையும் கோடுகள் மேற்காரை அமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். மேற்காரை பூச்சு வேலையையும் தவிர்த்துவிடக்கூடிய வகையில், எளிதாக பிரித்து எடுக்க ஏற்ற நவீன பார்மிங் சாதனங்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கை மற்றும் பரப்பில் அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றவும். அவற்றை ஸ்டோர் செய்ய அல்லது வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் கட்டுமான பணியிடத்தில் தகுந்த வசதிகள் ஏற்படுத்துவதும் அவசியம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com