

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். நவீன்ராஜ் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தாராள பிரபு படத்தில் நடித்த தான்யா ஹோப், கதாநாயகியாக நடிக்கிறார்.
கதாநாயகனும், கதாநாயகியும் வேறு வேறு விளம்பர நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். தொழில் போட்டியில் எலியும், பூனையுமாக மோதிக்கொள்கிறார்கள். இருவருக்கும் இடையேயான மோதல்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம் என்கிறார், டைரக்டர் பிரசாந்த்ராஜ்.