சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது.
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை
Published on

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது.

தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ஜெய் சுல்தான்... என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com