தகவல் பலகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

தகவல் பலகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
தகவல் பலகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் விக்னேஷ் (வயது 23). கூலித் தொழிலாளி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவில் கவுள்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அருமடல் சறுக்குபாலம் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சிமெண்டாலான தகவல் பலகை மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து ஓடையில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் இதனை பார்த்த அப்பகுதியினர், மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து விக்னேசின் அண்ணன் சதீஷ் கொடுத்த புகாரின்பேரில் விக்னேசின் உடலை மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com