புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

பெலகாவியில், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பெலகாவி :

பெலகாவி மாவட்டம் கானாப்பூர் தாலுகா லக்கேபைல் கிராமத்தை சேர்ந்தவர் தேமப்பா அர்ஜூன் (வயது 23). இவருக்கும், அவரது உறவினர் மகள் ஒருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தேமப்பா அர்ஜூன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தேமப்பா அர்ஜூன் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கானாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் குடும்ப தகராறில் தேமப்பா அர்ஜூன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கானாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com