பெயர் மாற்றத்துடன் புது லோகோ வெளியிட்ட 'சொமேட்டோ' நிறுவனம்


பெயர் மாற்றத்துடன் புது லோகோ வெளியிட்ட சொமேட்டோ நிறுவனம்
x
தினத்தந்தி 7 Feb 2025 11:17 AM IST (Updated: 7 Feb 2025 11:18 AM IST)
t-max-icont-min-icon

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் பெயர் 'எட்டர்னல்' என மாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சோமோட்டா. கடந்த 2008-ல் ஆம் ஆண்டு Foodie-Bay என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 2010- ஆம் ஆண்டு நிறுவனம் தனது பெயரை சொமேட்டோ என மாற்றியது. இந்த நிலையில், தான் மீண்டும் சொமேட்டாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதன் நிறுவனர் தீபிந்திர் கோயல் அறிக்கை ஒன்றை நிறுவன பங்குதாரர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில், "பிளிங்கிட்டை வாங்கியபோது நிறுவனத்தையும் பிராண்டையும் வேறுபடுத்தும் விதமாக எட்டர்னல் என நாங்கள் அழைக்க தொடங்கினோம். அதை ஒருநாள் அனைவரும் அறியும் விதமாக பொதுவெளியில் அறிவிக்கும் திட்டத்தையும் அப்போது கொண்டிருந்தோம்.

இன்று அந்த இடத்தை எட்டி உள்ளதாக கருதுகிறோம். அதனால் சொமேட்டோ லிமிடெட் என உள்ள நிறுவனத்தின் பெயரை எட்டர்னல் லிமிடெட் என மாற்ற விரும்புகிறோம். இதில் பிராண்ட் அல்லது செயலியில் நாங்கள் மாற்றத்தை மேற்கொள்ளவில்லை. இதற்கான ஒப்புதலை நிர்வாகக் குழு வழங்கி உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story