அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3 ஆயிரம் கோடி உயர்வு


அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3 ஆயிரம் கோடி உயர்வு
x

அன்னிய செலாவணி சந்தையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் அன்னிய செலாவணி சந்தையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரியும்போது உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 39 கோடியே 20 லட்சம் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது.

அதன்மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு 68 ஆயிரத்து 719 கோடி டாலர் (ரூ.62 லட்சத்து 53 ஆயிரத்து 429 கோடி) என்ற நிலையை எட்டி உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ந் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு 980 கோடி டாலர் சரிந்து காணப்பட்டது.

1 More update

Next Story