சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல்: கச்சா எண்ணெய் சேகரிப்பில் இந்தியா எடுத்த முடிவு

AI Image for representation
உலக பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய்யை சேகரித்து வைக்க வேண்டி உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு பெரும்பாலும் வெளிநாடுகளையே நம்பி வருகிறோம். நாட்டில் பயன்பாட்டிக்காக 80 சதவீதம் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் உலக பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய்யை சேகரித்து வைக்க வேண்டி உள்ளது. இதனால் புதிதாக எண்ணெய் சேகரிப்பு கிடங்குகளை அமைக்க மத்திய அரசாங்கத்திடம் இந்திய பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் நிறுவனம் ஒப்புதல் கேட்டுள்ளது.
அதன்படி ராஜஸ்தானின் பிகானெரில் 50 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, மங்களூருவில் 17 லட்சம் டன் கொள்ளளவு கிடங்கு மற்றும் மத்திய பிரதேசம் பினாவில் கிடங்கு என 3 புதிய கிடங்குகளை அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே மங்களூரு, படூர் (சென்னை) மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட கிடங்குகள் மூலமாக மொத்தம் 50 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.