கடந்த ஆண்டில் ரூ.11,700 கோடி வருவாய் திரட்டிய முதலீட்டு நிறுவனங்கள்

கடந்த ஆண்டில் முதலீட்டு நிறுவனங்கள் ரூ.11,700 கோடி வருவாய் திரட்டியுள்ளது.
புதுடெல்லி,
பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடமோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திடமோ இருந்து வாங்கி முதலீடு செய்து லாபம் ஈட்டுதல், கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் அமைப்பாக முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலும் இந்தத்துறையில் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே கோலோச்சி வருகின்றன.
அந்தவகையில் இந்தியாவில் கடந்த ஆண்டில் முதலீட்டு நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ.11 ஆயிரத்து 777 கோடி (1.3 பில்லியன் டாலர்கள்) என தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவின் ஜெப்ரிஸ் நிறுவனம் ரூ.890 கோடி (98.9 மில்லியன்) வருவாயும் மோர்கன் ஸ்டான்லி ரூ.765 கோடி வருவாயும் கடந்த ஆண்டில் பெற்றது.
Related Tags :
Next Story






