பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி ஆலை

ஐபோன் உள்பட மின்னனு பொருட்கள் உற்பத்தியில் உலகில் முக்கிய நிலையில் இந்தியா உயர இது உதவும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்தியில் இந்தியா கோலோச்ச தொடங்கி உள்ளது. இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளரான பாக்ஸ்கான், இந்தியாவில் தனது 2-வது பெரிய உற்பத்தி ஆலையை பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனஹள்ளியில் திறந்துள்ளது.
ரூ.25 ஆயிரம் கோடி (2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, புதிய ஐபோன் ரகமான 17 வகை போன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சென்னையில் பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஆலையை அமைத்து ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும்நிலையில் இது அதன் கூடுதல் ஆலையாக அமைகிறது. இதன்மூலம் ஐபோன் உள்பட மின்னனு பொருட்கள் உற்பத்தியில் உலகில் முக்கிய நிலையில் இந்தியா உயர இது உதவும்.
Related Tags :
Next Story






