உலகின் 'டாப்' 100 தொழிலதிபர்கள் பட்டியல்: 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி


உலகின் டாப் 100 தொழிலதிபர்கள் பட்டியல்:  12-வது இடத்தில் முகேஷ் அம்பானி
x

உலக அளவில் டாப் தொழிலதிபர் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

மும்பை,

உலக அளவில் டாப் 100 தொழிலதிபர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. தற்போது வணிகத்தில் யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்,இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 12-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய தொழில் அதிபர் இவர் மட்டுமே ஆவார். இந்திய வம்சாவளியினர் 6 பேரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 3-வது இடத்தை பிடித்துள்ளார். கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 10-வது இடத்தில் உள்ளார். அடோப் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் 52-வது இடத்திலும், யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் 69வது இடத்திலும், கோஸ்லா வென்ச்சர்ஸின் நிறுவனர் வினோத் கோஸ்லா 74வது இடத்திலும், ஐஸ் லிப்ஸ் பேஸ் நிறுவன சி.இ.ஓ., தரங் அமின் 94வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.

1 More update

Next Story