10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்று சாதனை படைத்த ராயல் என்பீல்ட்

ராயல் என்பீல்ட் நிறுவனம் கடந்த ஆண்டை விட 34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை,
ராயல் என்பீல்ட், ஒரே வருடத்தில் 10,00,000 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த நிதியாண்டில் 8,34,795 யூனிட்களில் இருந்து 25ஆம் நிதியாண்டில் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 9,02,757 யூனிட்களாக இருந்தது.அதே சமயம் ஏற்றுமதிகள் முந்தைய நிதியாண்டில் 77,937 யூனிட்களிலிருந்து, FY25-ல் 37 சதவீதம் அதிகரித்து 1,07,143 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மார்ச் 2025-ல் ராயல் என்பீல்ட் நிறுவனம் மொத்தம் 1,01,021 யூனிட்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் வளர்ச்சி ஆகும். ராயல் என்பீல்ட் நிறுவனம் கடந்த ஆண்டை விட 34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
Related Tags :
Next Story






