சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை


சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
x

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

மத்திய கிழக்கில் போர் பதற்றம், ரேப்போ வட்டி விகிதம் உள்பட பல்வேறு காரணிகளால் கடந்த வாரம் சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 53 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 10 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 139 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 840 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 10 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 30 புள்ளிகள்வரை ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 131 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 10 புள்ளிகள்வரை சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை மதியம் ஏற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story