சரிவுடன் வர்த்தகமாகும் நிப்டி; இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
சரிவுடன் வர்த்தகமாகும் நிப்டி; இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (15.12.2025 - திங்கட்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்பட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 18 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 28 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 73 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 458 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

65 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 606 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 37 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 231 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

36 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 872 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 32 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 699 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com