விளாத்திகுளத்தில் ரூ.2.75 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்

விளாத்திகுளத்தில் ரூ.2.75 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
விளாத்திகுளத்தில் ரூ.2.75 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
Published on

விளாத்திகுளம்,

விளாத்திகுளத்தில் தாலுகா அலுவலக கட்டிடம் பழுதடைந்ததால், தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை அகற்றி விட்டு, அங்கு ரூ.2 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், விளாத்திகுளம் யூனியன் பிள்ளையார்நத்தம் ஆதிதிராவிடர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் கோவில்பட்டி யூனியன் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் வகையில், ரூ.17 லட்சத்து 36 ஆயிரம் செலவில் வாங்கப்பட்ட 11 பேட்டரி வாகனங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர், அங்கு அமைக்கப்பட்ட வேளாண் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், யூனியன் ஆணையாளர்கள் தங்கவேல், முத்துகுமார், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் தனசிங், யூனியன் தலைவர்கள் முனியசக்தி ராமச்சந்திரன் (விளாத்திகுளம்), சுசீலா தனஞ்செயன் (புதூர்), மாவட்ட கவுன்சிலர் ஞான குருசாமி, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com