ஹெல்மெட் அணிவது குறித்து நூதன பிரசாரம்

சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் சண்முகபிரியா உத்தரவின் பேரில், மாதவரம் போக்குவரத்து உதவி கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையில் பிரசாரம் நடத்தப்பட்டது.
ஹெல்மெட் அணிவது குறித்து நூதன பிரசாரம்
Published on

செங்குன்றம்,

இதில், ஒருவர் எமன் போல் வேடமிட்டு பாச கயிறு வைத்துக்கொண்டு ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வருபவர் மீது வீசுவது போல பிரசாரம் செய்யப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தால் விபத்து ஏற்படும் போது உயிர் இழப்பு உண்டாகும் ஏற்படும் என்பதை விளக்கும் துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் நரேஷ்குமார், சதீஷ், சாந்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com