

திண்டுக்கல்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர்க்குழு சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பழனி சாலையில் உள்ள காந்திஜி நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்க துணை தலைவர் ஜெகன் தலைமை தாங்கி பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதசார்பின்மை, மக்கள் ஒற்றுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, நகர்குழு செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.