விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அம்பை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

அம்பை:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று முன்தினம் வடிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com