

பெருமாநல்லூர்,
திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் நால்ரோட்டில் பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ஐ அமல்படுத்தக்கோரி திருப்பூர் வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.சின்னச்சாமி தலைமை தாங்கினார். 40 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், சண்முகம், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வீரசக்திவேல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.