பிரம்மஸ்தான வர்ஷிக மகா உற்சவம் மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்

பெங்களூரில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் 2 நாட்கள் பிரம்மஸ்தான வர்ஷிக மகாஉற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
பிரம்மஸ்தான வர்ஷிக மகா உற்சவம் மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்
Published on

பெங்களூரு,

பெங்களூரு ஞானபாரதி 2வது ஸ்டேஜியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் நாளை (8ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (9ந்தேதி) ஆகிய 2 நாட்களும் பிரம்மஸ்தான வர்ஷிக மகாஉற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு ராகு, சனி, தோஷ பரிகாரத்திற்கு பூஜை நடக்கிறது. காலை 10.30 மணி அளவில் பஜனை, தியானம், சொற்பொழிவுகள் நடக்கிறது. மேலும் சிறப்பு பூஜையும், ஹோமமும் நடக்கிறது.

இந்த 2 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாதா அமிர்தானந்தமயி நாளை பெங்களூருவுக்கு வருகிறார். அவர் சத்சங்கம், பஜனை மற்றும் தியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். மேலும் அவர் பக்தர்கள் அனைவருக்கும் தனித்தனியாக தரிசனம் அளிக்கிறார். தரிசனத்திற்கு இலவச தரிசன டோக்கன் அதே நாளில் மடத்தில் கொடுக்கப்படுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மடத்தின் நிர்வாகி சேஷாத்திரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com