கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

பரமக்குடி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
Published on

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28). இவர் ராஜாக்கல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (24) என்பவர் மது அருந்த பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு வேல்முருகன் இல்லை என கூறியுள்ளார். உடனே கண்ணன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து வேல்முருகன் கழுத்தில் வைத்து மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 500 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வேல்முருகன் பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாண்டியன் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து காவலில் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com