

விழுப்புரம்
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதுபோல் ரெயில் போக்குவரத்தும் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் நேற்று அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ஓடின. இருப்பினும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை காரணம் காட்டி ரெயில் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் யாரேனும் ரெயில்வே தண்டவாள பகுதியில் பதுங்கியுள்ளனரா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
விழுப்புரம் ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமலதா தலைமையிலும் போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.