பவானிசாகர், சத்தியமங்கலத்தில் சாராயம் காய்ச்சிய 6 பேர் கைது

பவானிசாகர், சத்தியமங்கலத்தில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர், சத்தியமங்கலத்தில் சாராயம் காய்ச்சிய 6 பேர் கைது
Published on

பவானிசாகர்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக மதுப்பிரியர்கள் மது அருந்தமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஒருசில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதிகளில் பழங்களால் மதுபானம் தயாரிப்பதற்காக ஊறல் போட்டுள்ளதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் இலங்கை அகதிகள் முகாமுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது முகாமை சேர்ந்த காண்டீபன் (வயது 31), தேவா என்கிற தேவேந்திரன் (34), பிரபாகரன் (38), அன்ரன் (40), நிரோஜன் என்கிற ஜெயசீலன் (30) ஆகிய 5 பேரும் வீட்டில் பல்வேறுவிதமான பழங்களை கொண்டு மதுபானம் தயாரிப்பதற்கான ஊறல் போட்டிருந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஊறல் அழிக்கப்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலம் ராமபைலூர் கிராமத்தில் உள்ள வேட்டை தோட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய செந்தில்குமார் (33) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அதை கீழே கொட்டி அழித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com