

ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஆதம்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் முருகபூபதி(வயது 59). சிலைகடத்தல் தடுப்புபிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு கோழி அருகில் உள்ள ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மரிய அருள்(61) என்பவரின் நிலத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரிய அருள் அந்த கோழியை பிடித்து கழுத்தை திருகி கொன்றார். இதுகுறித்து கேட்டபோது, மண் வெட்டியால் தாக்கி கொலை செய்து விடுவதாக முருகபூபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து முருகபூபதி இறந்த கோழியுடன் சென்று ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மரியஅருள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மரியஅருள், முருகபூபதி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார். அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.