ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது.
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனை
Published on

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் கூடிய மாட்டு சந்தைக்கு விவசாயிகள் 60 கன்றுக்குட்டிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் விரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

450 பசு மாடுகளும், 250 எருமை மாடுகளும் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.32 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரைக்கும், எருமை மாடு ஒன்று ரூ.24 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் விரைக்கும் விற்பனை ஆனது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கேரளா, ஆந்திரா, மராட்டியம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். நேற்று சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com