சொத்து தகராறில் மோதல்; 4 பேர் படுகாயம்

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சொத்து தகராறில் மோதல்; 4 பேர் படுகாயம்
Published on

குழித்துறை,

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்லஞ்சி குழிவிளையை சேர்ந்தவர் செல்லசாமி (வயது74). இவருக்கு இவரது மகன் மகன் சிவகுமார் (40) என்பவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை செல்லசாமியின் மகளின் மகன் டால்சன் (30) என்பவர் தட்டிக்கேட்டார். சம்பவத்தன்று டால்சன், செல்லசாமியின் வீட்டில் இருப்பதை கண்ட சிவகுமார் தகராறு செய்தார். இதனால், அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் செல்லசாமி, அவர் மனைவி மரிய தங்கம், பேரன் டால்சன் மற்றும் சிவகுமார் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிவகுமார், டால்சன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com