கடையல் பேரூராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

கடையல் பேரூராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையல் பேரூராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
Published on

அருமனை,

கடையல் பேரூராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

கடையல் பேரூராட்சியில் நியமனக்குழு தேர்தல் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தேர்தலுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் வருகை தரவில்லை. மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒரு சுயேச்சை என 5 பேர் மட்டுமே வந்தனர். இதனால் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் வரி வசூல் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய முடியாமல் போனது.

இதனால் கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செயல் அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com