காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

எடப்பாடி:-

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எடப்பாடியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எடப்பாடி பஸ் நிலையத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மாட்டு வண்டியில் சிலிண்டரை ஏற்றி பஸ் நிலையத்தை சுற்றி வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். எடப்பாடி நகர்மன்ற துணைத்தலைவர் ராதா நாகராஜன் வரவேற்றார். இதில் ஆர்.டி.ஐ. தலைவர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். மாவட்ட துணைத்தலைவர்கள் மணி, சுப்பிரமணி, ராமநாதன், வரதராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் தேவராஜ், அழகேசன், அசோகன், விஜயகுமார், வட்டார மற்றும் நகர தலைவர்கள் மணி, சங்கர், முன்னாள் நகர தலைவர்கள் சுதந்திரம், சங்கர், சீனிவாசன், ரமேஷ் மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com