பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரசார் நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரசார் நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரசார் நூதன போராட்டம்
Published on

குமாரபாளையம்:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய் அரசு இதன் விலைகளை உடனடியாக குறைக்க கோரியும் குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்தும், இருசக்கர வாகனங்களை நிறுத்தியும், அதற்கு மாலை அணிவித்தும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதில் குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜானகிராமன், மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், நகர பொருளாளர் சிவராஜ், நகர செயலாளர்கள் சுப்பிரமணியம், தாமோதரன், முன்னாள் நகர காங்கிரஸ் செயலாளர் பி.ஜி.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com