தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா.
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 212 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 17 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 209 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 242 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26731ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com