திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல்: 120 பேர் கைது

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி நிதியை உயர்த்திதர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல்: 120 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது மாற்றுத்திறனாளிள் சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி நிதியை உயர்த்திதர வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 120 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com