

நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை ரூ.76 லட்சம் மற்றும் 13 வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.