குட்டையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

குட்டையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
குட்டையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
Published on

பல்லடம் ஒன்றியம் கரடிவாவி ஊராட்சியில் உள்ள கரடிவாவிபுதூரில் சின்னக்குட்டை உள்ளது. இது சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த நிலையில் காலப்போக்கில் சுமார், 30-க்கும் மேற்பட்ட வீடுகள், குடோன் ஆகியவற்றை கட்டி பலர் குட்டையை ஆக்கிரமித்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கார்த்திகேயன் என்ற விவசாயி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பேரில் குட்டையை அளவீடு செய்த வருவாய்த்துறையினர் குட்டையில் 3,548 ச.மீ. ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கரடிவாவி குட்டையில் இருந்த வீடுகள் மற்றும் குடோன் உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது.அங்குள்ள 20 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், அவர்களின் வீடுகளை அகற்ற அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க தேவையில்லை. ஒரு வார காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து கரடிவாவி குட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com