இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 129 படகுகளையும்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ராமேசுவரம்,

இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 129 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்தியமாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாம்பன், ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் சங்க தலைவர் சிப்பி சேசு தலைமை தாங்கினார். பாம்பன் முன்னாள் ஊராட்சி தலைவர் பேட்ரிக், சமுதாய தலைவர் சைமன், விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் வில்சன், ஜான்சன், தெற்குவாடி கிராம தலைவர் முனீசுவரன், சின்னப்பாலம் கிராம தலைவர் முருகேசன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com