

போடி:
போடி மற்றும் குரங்கணி மலைப்பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்தது.
மேலும் போடி நகர் பகுதியில் சாலையோர கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.