

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கு முன்பு சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை அறிவுறுத்தியும் நடவடிக்க எடுக்கவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரும்பேது சாலையில் செல்லும் தண்ணீரை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் குடைந்த குடிநீர்குழாயை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிந்து கிடக்கும் குப்பை
ஊத்துக்குளி தாலுகா.எஸ்.பெரியபாளையம் ஊராட்சி குளத்துப்பாளையம் 3-வார்டு பகுதியில் குப்பைகள் அதிகமாக உள்ளது. இவை அகற்றப்படாததால் ஈ மற்றும் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. குப்பை கிடக்கும் சாலை வழியே பொதுமக்கள் போக முடியாதவாறு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச்சல் உள்பட பல்வறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்மாற்றியில் அடிக்கடி மின் கசிவு
அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் அடிக்கடி மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி கிளம்புகிறது. இதன் வழியே காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி குழந்தைகள் செல்கிறார்கள். இந்தியன் படப்பாணியில் அதிகாரிகள் இருந்து விடாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் மாற்றி கம்பத்தை சற்று பள்ளி வளாகத்தை விட்டு தள்ளி அமைத்தால் எப்போதும் பள்ளிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் பொதுமக்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர.
குழாய் உடைப்பு
பொதுமக்களின் அன்றாட அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கை மேற்கெண்டு வருகிறது. குறிப்பாக குப்பை அப்புறப்படுத்துதல், குடிநீர் வினியாகம், தெருவிளக்கு பராமரிப்பு, கழிவு நீர் தேங்காமல் பராமரிப்பது, கொசு மருந்து தெளிப்பது அவற்றில் முக்கியம். அதுவும் குடிநீர் வினியோகம் செய்ய அதிக செலவு செய்கிறது. எனவே அதிக செலவு செய்தும் அந்த குடிநீரை வீணாக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தலையாய கடமை. ஆனால் பல்வேறு இடங்களில் குடிநீர்வினியோகம் செய்யும் போது குழாயில் கசிவு ஏற்பட்டோ அல்லது குழாய் உடைந்தோ குடிநீர் அதிகம் வீணாகிறது. திருப்பூர் கோம்பைய தோட்டம் சிடிசி கார்னர் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி நிற்கும் கழிவு நீர்
திருப்பூர் காலேஜ் ரோடு தனியார் பள்ளி கீழ் பகுதியில் முருங்கப்பாளையம் இட்டேரி சாலையில் உள்ள சாக்கடை கடந்த 15 நாட்களாக திடக்கழிவுகளால் நிரம்பி கழிவு நீர் செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் நிறைய உற்பத்தியாகி சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.