வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி பெண் பலி

வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி பெண் பலி
வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி பெண் பலி
Published on

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலிகண்டபுரம் தம்பை பகுதியில், நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com