திருநெல்வேலியில் மது விற்ற கணவன்-மனைவி கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலியில் மது விற்ற கணவன்-மனைவி கைது
Published on

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் உத்தரவின்படி, வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் மேற்பார்வையில், கூடங்குளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) கதிரவன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஞானகிறிஸ்டோபர் (வயது 56) மற்றும் அவரது மனைவி பிரகாசி(23) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கூடங்குளம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஞானகிறிஸ்டோபர், பிரகாசி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் போலீசார் அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com