விளாத்திகுளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி

விளாத்திகுளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
விளாத்திகுளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி
Published on

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி விளாத்திகுளம்-வேம்பார் சாலையில் நேற்று நடந்தது. மாணவிகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரத்துக்கும், மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் போட்டி நடத்தப்பட்டது.

மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கமுத்துமாரி பிடித்தார். அவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடத்தை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவி ரம்யாவும், 3-வது இடத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.1,500 மற்றும் ரூ.1,000 பரிசு தொகை வழங்கப்பட்டது.

மாணவர்கள் போட்டியில் முதல் இடத்தை வ.உ.சி. கல்லூரி மாணவர் பசும்கோபிநாத் பிடித்தார். இவருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது இடத்தை காரைக்குடி கோவிலூர் ஆண்டவர் கல்லூரி மாணவர் பட்டாணி, 3-வது இடத்தை ஜி.டி.என். கல்லூரி மாணவர் கற்குவேல் பிரதீப் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.1,000 பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெருமாள், மார்க்கண்டேயன் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பால்சாமி ஒருங்கிணைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com