பழைய நாணயங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற மோசடி அதிகரிப்பு

மோசடியான சமூக வளைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என நெல்லை மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழைய நாணயங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற மோசடி அதிகரிப்பு
Published on

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மொபைல் போன் மூலமாக பழைய நாணயங்கள் வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேவைகளுக்கு ஏற்ப தற்போது ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கி வரும் பழக்கம் வழக்கமாக இருந்து வரும் இந்த நேரத்தில் அதை மையமாக குறிவைத்து பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதன் மதிப்பு பல ஆயிரங்கள் முதல் பல லட்சங்களில் இருக்கிறது என நம்பவைத்து தெரியாத சமூக வளைதளங்களில் இருந்து வரும் விளம்பரங்களை நம்பி அவர்கள் கேட்கும் Document Charge, Delivery charge மற்றும் GST Charge என பல வகையாக பணம் கேட்பார்கள்.

அதனை உண்மை என நம்பி பணம் அனுப்பினால் அவர்கள் உங்களிடம் இருந்து மொத்த பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பாமல் ஏமாற்றி விடுவார்கள். எனவே மோசடியான சமூக வளைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற குற்றம் ஏதும் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணையதளத்தில் அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com