

தஞ்சாவூர்,
தஞ்சையில் இந்தியன் வங்கி ஊழியர் சங்க கூட்டம், தஞ்சை யாகப்பா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில செயல் தலைவர் சொக்கலிங்கம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹேமன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி தலைவர் கீதா நன்றி கூறினார்.