

சேந்தமங்கலம்:
ஆணையர் ஆய்வு
கொல்லிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அங்கன்வாடி மையங்களில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு துறை ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள தின்னனூர் நாடு ஊராட்சி வாசலூர்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு வந்த அவரை, வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி, தலைமை ஆசிரியை செல்வராணி ஆகியோர் வரவேற்றனர்.
பாதுகாப்பு
அதைத்தொடர்ந்து அவர் பள்ளி மாணவ-மாணவிகளிடையே பேசினார். மேலும் பள்ளியில் அவர்களது பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிற வசதிகள், குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவிகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வது குறித்தும், மேல் படிப்பை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்தும் விரிவாக பேசினார்.
பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பை, பேனா, பென்சில், நோட்டு-புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் உடன் இருந்தனர்.