திருத்தணி ரெயில் நிலையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்; ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை

திருத்தணி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கடந்து செல்ல முற்படும் பயணிகள் விபத்துகளில் சிக்குவதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருத்தணி ரெயில் நிலையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்; ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
Published on

திருத்தணி ரெயில் நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். திருத்தணி ரெயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. இதில் மூன்றாவது நடைமேடை அருகில் நகராட்சி உட்பட்ட காந்தி ரோடு, பழைய பை-பாஸ் சாலை செல்லும் பகுதிக்கு வழி உள்ளது. இந்த வழியாக வரும் பயணிகள் விரைவு மற்றும் மின்சார ரெயிலில் செல்வதற்கு படிக்கட்டு மூலம் பயணம் செய்யாமல், அபாயகரமான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதால் அடிக்கடி ரெயிலில் அடிபட்டு இறக்கின்றனர்.

தடுப்பு சுவர் அமைக்கும் பணி

இதைதடுக்கும் வகையில், திருத்தணி ரெயில்வே நிர்வாகம் காந்தி ரோடு மெயின் சாலை அருகே ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை துரித வேகத்தில் நடத்தி வருகின்றன.

தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்குள் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நிறைவடையும் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com