கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 20-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹாரம்
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு மறுநாள் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முருகப்பெருமானுக்கு மட்டும் காப்புக்கட்டுதல் நடக்கிறது. இதேசமயம் வழக்கம்போல பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து 7 நாட்கள் விரதம் இருப்பது ஊரடங்கால் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அவரவர் வீட்டில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்து வேண்டுதலை வீட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. திருவிழாவின் தொடக்கமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமிக்கு மட்டும் காப்பு கட்டுதல் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 19-ந்தேதி (வியாழக்கிழமை) வேல்வாங்குதலும், 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹார லீலையும், 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலையில் பாவாடை தரிசனம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா முழுவதும் கோவிலுக்குள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com