செங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

செங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
செங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
Published on

செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் கவியரசு (வயது 8). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விளையாடுவதற்காக வெளியே சென்ற கவியரசு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தநிலையில் போலீசார் மாணவனை தேடி வந்த நிலையில், நேற்று காலை அலமாதி அருகே உள்ள ஒரு குளத்தில் மாணவன் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com