லாரி மோதி வாலிபர் சாவு

லாரி மோதி வாலிபர் சாவு
லாரி மோதி வாலிபர் சாவு
லாரி மோதி வாலிபர் சாவு
Published on

காரமடை

காரமடை அருகே சீலியூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29).வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, முத்துக்கல்லூர் பகுதியில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சீலியூர் பஸ் நிலையம் அருகே நால்ரோட்டில் வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு மற்றொரு இருசக்கர வாகனத்தின் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

----------------

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com