மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது

மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு சொந்தமான மினிவேனை தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கரத்தினமணி(வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். இவர், மினிவேனில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒர்க்ஷாப்புக்கு நேற்று காலையில் ஓட்டி சென்றார். ஒர்க்ஷாப் அருகே சென்ற போது திடீரென மினிவேனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது. தங்கரத்தினமணி வேனில் இருந்து இறங்கி தப்பினார். உடனடியாக தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் மினிவேனின் பெரும் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com